நெகிரி செம்பிலானில் சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக RM135.8 மில்லியன் ஒதுக்கீடு

கோலாலம்பூர்:

நெகிரி செம்பிலானில் உள்ள கூட்டாட்சி சாலை, பாலம் மற்றும் கூட்டாட்சி பயன்பாட்டு கட்டிட பராமரிப்புக்காக RM135.8 மில்லியன் ஒதுக்கீட்டை வழங்குவதாக பொதுப்பணித்துறை அமைச்சகம் உறுதியளித்துள்ளது.

மை ஜாலான் திட்டத்தின் கீழ், பொதுப் பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி சமீபத்தில் மாநிலத்திற்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து, அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் இதனை உறுதிப்படுத்தியது.

மேலும் RM1.2 பில்லியன் மொத்த ஒதுக்கீட்டில் மாநிலத்தில் ஒன்பது கூட்டாட்சி சாலைத் திட்டங்களின் வளர்ச்சிக்கு பயன்படும் ” என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நெகிரி செம்பிலானில் உள்ள ஜாலான் பெர்செகுடுவானில் உள்ள பல இடங்களில் ஸ்மார்ட் போக்குவரத்து விளக்குகளை (STL) நிறுவுவதற்காக மாநில மந்திரி பெசார் அமினுடினின் இரண்டு முன்மொழிவுகளை மறுபரிசீலனை செய்ய பொதுப்பணித்துறை ஒப்புக் கொண்டுள்ளது, இது மாநிலத்தில் போக்குவரத்து மேலாண்மை அமைப்புகளை மேம்படுத்த உதவும்” என்றும் அமைச்சகம் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் நெகிரி செம்பிலானில் உள்ள மூன்று நெடுஞ்சாலைத் திட்டங்களைத் தனியார்மயமாக்குவதற்கான பேச்சுவார்த்தையில் மலேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் ஒத்துழைப்பதாகவும் அமைச்சகம் கூறியது, இதில் மாநில அரசாங்கத்தின் முன்னுரிமை திட்டமான பரோய் முதல் செனாவாங் நெடுஞ்சாலை வரை உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here