மைபிபிபி கட்சி மக்களின் அடுத்த தேர்வாக இருக்கும்: டத்தோ லோகா பாலா மோகன்

மைபிபிபி தேசியத்தலைவர் டத்தோ லோக பால மோகனுக்கு மாநிலத் தலைவர் சத்யா சுதாகரன் சிறப்பு செய்யும்போது

நம்மையும் நம் கட்சியையும் பழித்தவர்கள் முன்பு நாம் இன்று தலைநிமிர்ந்து நிற்கிறோம்.யார் என்ன பேசினாலும் நம் குறிக்கோளை நோக்கி நாம் முன்னேறுவோம் என்று மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ லோகா பாலா மோகன் தெரிவித்தார்.  ஒரு முறை அல்ல… மூன்று முறை நமது கட்சி ரத்தாகி  இருக்கிறது. சோதனைகளை கடந்து சாதனைப் படைப்பதே நமது எண்ணமாக இருக்க வேண்டும். மக்களின் அடுத்த தேர்வாக மைபிபிபி கட்சி இருக்கும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று விலாயா மாநில ஆண்டுக்கூட்டத்தில் தலைமையுரையாற்றியபோது தெரிவித்தார்.

பல இன கட்சியாக மைபிபிபி விளங்கி வந்தாலும் ஸம்ரி வினோத் போன்றவர்கள் சமயத்தை இழிவுப்படுத்தி பேசினால் எங்களால் பொறுத்து கொள்ள முடியாது. காரணம் நாம் இனம் – சமயத்தை கடந்து மலேசியர்கள் என்ற உணர்வோடு வாழ்ந்து வருகிறோம். அதே போல் மாற்றங்களை கொண்டு வர விரும்பினால் அது அரசாங்கத்துடன் போராடுவது அல்ல… மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். உதாரணத்திற்கு அனைத்து இனத்தவருக்குமான சம கல்வி குறித்து பேசி வருகிறோம். அதனை இன்றைய இளைய தலைமுறையினர் புரிந்து கொண்டால் அடுத்த முறையினருக்கு சம கல்வி கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

அடுத்த பொதுத்தேர்தலுக்கு இன்னும் 3 ஆண்டுகள் இருக்கிறது. நாம் இப்பொழுதில் இருந்தே உழைக்க வேண்டும். என்னுடன் அனைத்து கட்சி உயர்மட்டத் தலைவர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை ஒத்துழைப்பு நல்குவார்கள் என்று நம்புகிறேன். கட்சியின் வளர்ச்சி அனைவரின் ஒத்துழைப்பினால் மட்டுமே  பெற முடியும். உங்களது ஏதாவது நிறை குறைகள் இருந்தால் என்னை நேரடியாக வந்து சந்தித்து தெரிவிக்கலாம். இன்றைய மாநில ஆண்டுக்கூட்டத்தில் 2024- 2026ஆம் ஆண்டிற்கான தலைவர் உள்ளிட்ட பொறுப்பாளர்களின் அறிமுகமும் நடைபெற்றது.

தொடர்ந்து தற்பொழுது பரவலமாக பேசப்பட்டு வரும் விவேகானந்தா ஆசிரமம் குறித்து கேட்டபோது முதலில்  விரிவான விளக்கத்தை சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் இருந்து பெறுமாறு வலியுறுத்தினார். கண்டதே காட்சி… கொண்டதே கோலம் என்று இருக்க வேண்டாம் என்றார். மேலும் நான் விலாயா மாநில துணை அமைச்சராக இருந்தபோது விவேகானந்தா ஆசிரமம் பராம்ரிய கட்டடமாக நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. பராம்பரிய கட்டடத்திற்கு என்று ஒரு தனி இலாகா இருப்பதாகவும் கோலாலம்பூர் மாநகர மன்றத்திற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்றும் அவர் தெளிவுப்படுத்தினார்.

2024-2026 விலாயா மாநில பொறுப்பாளர்கள்

மைபிபிபி விலாயா மாநிலத்தலைவர் சத்யா சுதாகரன் தமதுரையில் ஒரு குழந்தை -ஒரு ஆசிரியர் – ஒரு புத்தகம் உலகை மாற்றக் கூடிய வல்லமை உள்ளது என்றார். நாம் ஒன்றிணைந்து செயல்பட்டால் மாற்றத்தைக் கொண்டு வர முடியும். நமது சமயத்தை இழிவாக பேசுவோர் மீது கட்சி காவல்துறையில் புகாரினை பதிவு செய்திருக்கிறது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here