வங்சா மாஜூவில் 2 கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது

கோலாலம்பூர்:

டந்த புதன்கிழமை, வங்சா மாஜூவில் உள்ள ஒரு குடியிருப்பில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என நம்பப்படும் ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

33 வயதான உள்ளூர் ஆடவர் பிற்பகல் 2.55 மணியளவில் கைது செய்யப்பட்டதாகவும், அவரது புரோத்தோன் பெர்சோனா காரை சோதனை செய்ததில் அதிலிருந்த 2,006 கிராம் கஞ்சா மற்றும் 7,346 ரிங்கிட் மதிப்புள்ள 100 எரிமின் 5 மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர் என்று, வங்சா மாஜூ மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் அஷாரி அபு சாமா தெரிவித்தார்.

மேலும் “நாங்கள் RM43,000 மதிப்புள்ள காரையும் பறிமுதல் செய்தோம், போதைப்பொருள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தின் மொத்த மதிப்பு RM50,404 என்றும் அவர் கூறினார்.

“பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களை மொத்தம் 2,106 போதைபித்தர்கள் பயன்படுத்த முடியும்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குறித்த போதைப்பொருள் கடத்தல் குழு கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஆறு மாதங்களாக செயல்படுவது கண்டறியப்பட்டதாக ஆஷாரி கூறினார்.

போதைப்பொருள் விநியோகம் செய்யப்பட்ட இடத்தைக் கண்டறிய போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சந்தேகநபரின் முதற்கட்ட சிறுநீர் பரிசோதனையில் அவர் போதைப்பொருள் பாவிக்கவில்லை என தெரியவந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

“சந்தேக நபருக்கு போதைப்பொருள் தொடர்பான நான்கு முந்தைய பதிவுகள் இருப்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

“ஆபத்தான போதைப்பொருள் சட்டம் (ADB) 1952 இன் பிரிவு 39B இன் படி மேலும் விசாரணைக்காக சந்தேக நபர் பிப்ரவரி 28 வரை ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here