நோன்பு பெருநாள் : சபா, சரவாக் மற்றும் லாபுவானுக்கான அதிகபட்ச விமான கட்டணமாக RM599 என நிர்ணயம்

ஜெலேபு:

தீபகற்ப மலேசியாவில் இருந்து சபா, சரவாக் மற்றும் லாபுவான் ஆகிய இடங்களுக்குச் செல்லும் ஒருவழிப் பொருளாதார வகுப்பு விமானத்திற்கான அதிகபட்சக் கட்டணமாக RM599 அறவிடப்பட வேண்டும் என அரசாங்கம் நிர்ணயித்துள்ளது, இது ரம்ழான் நோன்பு பெருநாளுக்கு மூன்று நாட்களுக்கு முன்பிருக்கும் செய்யும் பயணத்திற்குப் பொருந்தும்.

ஏப்ரலில் வரும் ரம்ழான் நோன்பு பெருநாளை முன்னிட்டு மக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்கு உதவுவதற்கான அரசாங்கத்தால் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்.

“சீனப் புத்தாண்டு, நோன்புப்பெருநாள், கவாய், கீமாடன் அல்லது கிறிஸ்மஸ் என எல்லாப் பண்டிகைகளுக்கும் எங்களிடம் ஒரு கொள்கை உள்ளது. இந்தக் கொண்டாட்டங்களுக்கு மூன்று நாட்களுக்கு முன், அரசாங்கம் அதிகபட்ச விலையை (விமான டிக்கெட்டுகளின்) நிர்ணயம் செய்யும். இருப்பினும், தீபகற்ப மலேசியாவில் சேவையிலுள்ள பேருந்துகள் மற்றும் ரயில்கள் போன்ற மாற்று போக்குவரத்து முறைகளுக்கு, அதிகபட்ச விலை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றார்.

“விமான டிக்கெட்டுகளை முன்கூட்டியே வாங்குபவர்கள் மலிவான விலையைப் பெறலாம், ஆனால் டிக்கெட் பற்றாக்குறை ஏற்பட்டால், விலைகள் உயரலாம். அதாவது RM599 ஐத் தாண்டினால், மூன்று நாட்களுக்குள் அரசாங்க மானியங்கள் வழங்கப்படும்” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

எவ்வாறாயினும், அதிகபட்ச டிக்கெட் விலையை அமல்படுத்துவதற்கு முன் ஐடில்பித்ரியின் சரியான தேதியை தீர்மானிக்க பிரதமர் துறை அமைச்சர் (மத விவகாரங்கள்) உட்பட அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் அமைச்சகம் கேட்கும் என்று சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here