ஊடகவியாளர்களுடன் நோன்பு துறந்த பிரதமர் தம்பதியர்

புத்ராஜெயா: ரமலான் மாதம் இரண்டாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்  ஊடகவியாளர்களுடன் சிறிது நேரம் செலவிட்டுள்ளார். புதன்கிழமை (மார்ச் 20) ஶ்ரீ பெர்டானாவில் நடைபெற்ற மடானி நோன்பு துறப்பு விழாவின் போது, ​​அன்வார் 20 ஊடகப் பயிற்சியாளர்களுக்கு நிதி உதவியும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களைச் சந்திக்கவும், உரையாடவும், கதைகளைப் பகிர்ந்து கொள்ளவும் பிரதமர் சிறிது நேரம் எடுத்துக் கொண்டார்.

அன்வாரின் மனைவி, டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில், தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில், பெர்னாமா தலைவர் டத்தோஸ்ரீ வோங் சுன் வை மற்றும் ஸ்டார் மீடியா குழுமத்தின் தலைமை உள்ளடக்க அதிகாரி டத்தின் பாதுகா எஸ்தர் எங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here