வில்லேஜ் குக்கிங் சேனல் தாத்தாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு – மருத்துவமனையில் அனுமதி

புதுக்கோட்டை மாவட்டம் சின்ன வீரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்கள் பெரியதம்பி மற்றும் அவரது குடும்பத்தினர். இவர்கள் ‘வில்லேஜ் குக்கிங் சேனல்’ என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த சேனலுக்கு 24 மில்லியனுக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.

இந்த சேனலில் தனித்துவமான சமையல் மற்றும் உணவு பொருட்களை அடிப்படையாக கொண்டு வீடியோக்கள் வெளியிடப்படுகிறது. சாதாரணமாக ஆரம்பித்த இவர்களின் யூடியூப் பயணம் ராகுல்காந்தி வரை பிரபலமடைந்தது. மேலும், இவர்கள் கமல்ஹாசனின் வெற்றிப்படமான விக்ரம் படத்தின் ஒரு காட்சியிலும் ஒரு காட்சியில் நடித்திருந்தனர்.

வில்லேஜ் குக்கிங் சேனலில் மூத்த சமையல் கலைஞராக இருப்பவர் பெரிய தம்பி. தாத்தா என்று அன்போடு அழைக்கப்படும் இவர், இந்த சேனலில் முக்கிய நபராக உள்ளார். இவரின் ‘இன்னைக்கு ஒரு புடி’ என்ற வசனம் மிகவும் பிரபலம். இந்நிலையில் பெரிய தம்பிக்கு இதய நோய் காரணமாக திடீரென உடல் நலக்கோளாறு ஏற்பட்டது.

இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அந்த குழுவைச் சேர்ந்த சுப்பிரமணியன் வேலுச்சாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் “தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here