உருவம் இருந்தால் தானே நிழல் தெரியும்!

உருவம் இருந்தால்தான் நிழலும் தொடரும். அப்படித்தான் இன்றைய அரசியல் நிழல்கள்  அலைகின்றன. கூட்டமாக உலவுகின்ற நிழல் யாருக்கானது என்று உத்தேசிக்க முடியவில்லை. அனாலும் கணிக்கமுடிகிறது.

ஏன் இந்த கொலைவெறி பாடல் போல் அர்த்தமில்லாத அரசியலில், நியாயப் பொருள் தேடுவது என்பது பூமிக்குள் நுழைந்து அடுத்த பக்கத்தில் வருகின்ற முயற்சியாகவே இருக்கும். அதுபோன்றுதான் இன்றைய அரசியல் குழப்பங்களும் இருக்கின்றன. தொடர்கின்றன.

இது மேசை நாற்காலை

ஒன்று மட்டும் நிச்சயம். டத்தோஶ்ரீ அனுவார் ஏற்படுத்தும் அரசியல் அலையின் வேகம் போதாது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.

ஒன்று, இரண்டு, மூன்று என்பதெல்லாம் பழைய எண்ணிக்கை முறை. இப்போது புதியதாக பிளஸ், பிளஸ் என்ற முறைதான் கையாளப்படுகிறது. இதுதான் புதிய ட்ரெண்ட்.  இதைத்தெரிந்துகொள்ள துன் மகாதீர்தான் விஷயம் தெரிந்தவராக இருக்கிறார்.

அவர், தனக்காக மட்டும் கவலைப்படவில்லை. தன் வாரிசுகளுக்காகத்தான் அரசியல் போராட்டம் நடத்துவதாகவே பேசப்படுகிறது. அதற்காக அசுரத்தனமாக நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாகவே உணரப்படுகிறது.

முதிர்ந்த வயதில் மகாதீருக்கு அரசியல் தேவையில்லை. டான்ஶ்ரீ முஹிடின் துரோகம் செய்துவிட்டதாகவே அவர் கருதுகிறார் போலும். அதற்காகவே நிழல் அமைச்சரவையை அமைத்திருக்கிறார் மாகாதீர். சில சமயம் வியூகங்களும் காலை வாரிவிடும் என்பதையும் அவரே உணர்ந்திருக்கிறார்.

பாக்காத்தான் கட்சியிலிருந்து வடிகட்டியவர்கள் மட்டுமே பிளஸ் கட்சியில் இணைந்திருக்கிறார்கள் என்பதும் புரிகிறது. பிளஸ் கட்சியிலும் துன் டாக்டர் மகாதீர்தான் நிழல் பிரதமர். அன்வாருக்கு துணைப்பிரதமர், ஷாஃபி அப்டாலும் துணைப்பிரதமர். என்பது தவறல்ல. டத்தோஶ்ரீ அன்வார் துணைப் பிரதமராகத்தான் வேண்டும் என்பது தலையெழுத்தா. அல்லது கட்டளையா?

டத்தோஶ்ரீ அன்வாரைப் பொறுத்த வரை ஏமாற்றம் மட்டுமே மாறாதது  என்று அகராதியில் சேர்க்கப்பட்டு விட்டது போலும்.

இவற்றின் பிரதிபலன் பொதுத்தேர்தலில் தெரிந்துவிடும். அதற்குமுன் டான்ஶ்ரீ முஹிடின் நிழலை அகற்றுவது எப்படி என்பதையும் யோசிக்கத்தானே வேண்டும். அது சுலபமான காரியமா என்ன?

பொதுத்தேர்தல் சூடு பிடிக்கத்தொடங்கிவிட்டது. அதன் நிழல் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here