MRSM பாலியல் வழக்கு: ஆசிரியர் மற்றும் மாணவர்களை விசாரணைக்கு அழைத்த கிளந்தான் போலீஸ்

கோத்தா பாரு:
தும்பாட் மாரா ஜூனியர் சயின்ஸ் கல்லூரியில் (MRSM) ஆசிரியர் ஒருவர் பாலியல் சேட்டையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை எளிதாக்க, கிளந்தான் காவல்துறை ஒரு மாணவர் மற்றும் ஆசிரியர் உட்பட பல சாட்சிகளை அழைத்துள்ளது.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவரிடமிருந்து ஒரு அறிக்கையைப் பெற்றிருப்பதாக கிளந்தான் காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் ஜாக்கி ஹாருன் கூறினார்.

வாட்ஸ்அப் உரையாடல்கள் உட்பட அவர்களின் தொலைபேசியில் உள்ள அனைத்து உள்ளடக்கங்களையும் போலீசார் சேகரித்துள்ளதுடன், இந்த வழக்கை தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1998 இன் பிரிவு 233, மற்றும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 500 இன் கீழ் விசாரணை நடத்த வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

217வது போலீஸ் தினத்தை முன்னிட்டு கிளந்தான் போலீஸ் படைத் தலைமைய கத்தில் இன்று நடைபெற்ற ரமழான் இப்தார் நிகழ்வில் கலந்து கொண்ட அவர் நிருபர்களிடம் பேசுகையில், “காவல்துறையினர் உண்மையை வெளிக்கொணரும் என்றும், அதற்கான முயற்சியில் தங்கள் தரப்பு ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், இது குறித்து விசாரணைகள் நடந்து வருவதால் ஊகங்களை வெளியிட வேண்டாம் என பொதுமக்களை கேட்டுக்கொண்ட அவர், தகவல் தெரிந்தவர்கள் காவல்துறைக்கு ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here