தனுஷ் தற்போது ‘ராயன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அவரே இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷின் அண்ணனான இயக்குனர் செல்வராகவன் மற்றும் எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் ‘ராயன்’ படத்தின் புதிய அப்டேட்டை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தனுஷ் தனது 50 வது படத்தை இயக்கி நடித்துள்ளார். ‘ராயன்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படத்தினை மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் இயக்கி முடித்துள்ளார். விரைவில் இப்படம் ரிலீஸ் ஆகுவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் ‘ராயன்’ படத்தின் மிரட்டலான அப்டேட் ஒன்றினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக, எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தனது வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் தனுஷ். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பிற மொழி படங்களில் பிசியாக நடித்து கொண்டிருக்கிறார். இவரது நடிப்பில் கடைசியாக பொங்கலை முன்னிட்டு ‘கேப்டன் மில்லர்’ படம் ரிலீசாகி இருந்தது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசான இப்படத்தின் கதைக்களம் சுதந்திரத்துக்கு முந்தைய காலக்கட்டத்தில் நடப்பதை போன்று அமைக்கப்பட்டு இருந்தது. இதில் ஒடுக்கப்பட்ட மக்களின் கோயில் நுழைவு உரிமை போராட்டம் பற்றி பேசியிருந்தார் அருண் மாதேஸ்வரன். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.





















