சுங்கை பட்டாணி,
SST வரி பரவலாக்கம் மாணவர்களின் கல்விச்செலவுகளில் தாக்கம் ஏற்படுத்தியுள்ளதா என்பதை மதிப்பீடு செய்ய, அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களும் விரிவான ஆய்வை மேற்கொள்ள உயர்கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வரி மாற்றம் மலேசியாவுக்கு வருகை தரும் சர்வதேச மாணவர்களுக்கான கட்டணங்களை அதிகரித்திருக்கலாம் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும், மாணவர்கள் வெளியே வாடகைக்கு வசிக்கும் இடங்களில் மின்சாரம் உள்ளிட்ட கட்டணங்கள், டிஜிட்டல் சேவைகள், ஆன்லைன் வாங்கல்கள் போன்றவை நேரடியாகவும் மறைமுகமாகவும் மாணவர்களின் வாழ்க்கைச் செலவுகளை உயர்த்தியிருக்கலாம் என உயர்கல்வி அமைச்சர் டத்தோ Zambry Abd Kadir கூறினார்.
இந்த ஆய்வின் முடிவுகள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும், மலேசிய உயர்கல்வி திட்டம் 2025–2035, வரும் நவம்பரில் பிரதமர் அன்வார் இப்ராஹிம் மூலம் வெளியிடப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.





















