முகம் சுழிக்கவைக்கும் காட்சிகள் தேவையா? சீரியலுக்கு எதிராக சீறும் ரசிகர்கள்!

”குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து பார்க்கும் சீரியல்களில் எதற்கு இவ்வளவு நெருக்கமான காட்சிகள்?” என பிரபல தனியார் டிவி-யில் ஒளிபரப்பாகும் ஒரு சீரியலை ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

சேனல்களின் டிஆர்பி-க்காக சின்னத்திரையில் நடிகர்களுக்கு ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைப்பது, பில்டப்புடன் கூடிய காட்சிகளை வைப்பது, முதலிரவு காட்சிகள் என எல்லை மீறிப் போவதாக கடந்த சில வருடங்களாகவே ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும் பல சீரியல்களில் கூட ரொமான்ஸ் என்ற பெயரில் இவர்கள் செய்யும் அட்டூழியம் தாங்க முடியவில்லை என ஆதங்கத்தைக் கொட்டி வருகின்றனர்.

இதில் அடுத்த நிலையாக, ஒரு பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலின் புரோமோவைப் பார்த்து ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here