12 மணிநேரமாக 30 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 2 வயது குழந்தை பத்திரமாக மீட்பு

 கர்நாடகாவின் லச்சயன் கிராமத்தில் நேற்று (03) மாலை 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறுதலாக விழுந்து, சிக்கி தவித்து வந்துள்ளது. 15-20 அடி ஆழத்தில் சிக்கியிருக்கும் சிறுவனை மீட்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் தவறி விழுந்த குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வீடியோ காட்சியின் மூலம் குழந்தையை கண்காணித்த பொழுது, அக்குழந்தை தலைகீழாக இருப்பது தெரியவந்தது. பின் குழந்தையை மீட்டெடுப்பதற்காக சுமார் 21 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணற்றுக்கு இணையான குழி அதிகாரிகள் தோண்டியுள்ளனர்.  அருகில் தோண்டி குழியின் ஊடாக மீட்பு படையினர் சென்று குழந்தையை உயிருடன் மீட்டுள்ளனர். மீட்டெடுக்கப்பட்ட குழந்தைக்கு மருத்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here