ஸம்ரி வினோத் மீது அவதூறு வழக்கு மலேசிய இந்து சங்கம் தொடுக்க வேண்டும் ம.இ.கா. வலியுறுத்தல்

•(பி.ஆர். ராஜன்)

கோலாலம்பூர்:

​இந்து சமயத்தைத் தொடர்ந்து இழிவுபடுத்திவரும் ஸம்ரி வினோத் மீது அவதூறு வழக்குத் தொடுப்பதற்கு மலேசிய இந்து சங்கம் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

​அதேசமயம் இந்து சமயத்தை அந்நபர் தொடர்ந்து இழிவுபடுத்தக் கூடாது என்பதற்கு இடைக்காலத் தடைஉத்தரவு ஒன்றை  மலேசிய இந்து சங்கம் பெறவேண்டும் என்று  ம.இ.கா. தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.

​ஸம்ரி வினோத் அவர் சார்ந்திருக்கும் சமயத்தை மட்டும் பேசட்டும், பரப்பட்டும். இந்து சமயம், நம்பிக்கை ஆகியவற்றைப் பேசும் அதிகாரம் இல்லை.  இதுவரை அவர்பேசியது போதும். இனியும் இந்து சமயத்தையும் இந்துக்களின் நம்பிக்கையையும் அவர் இழிவுபடுத்திப் பேசக்கூடாது.

​இதற்கு அவதூறு வழக்கும்  இடைக்காலத் தடைஉத்தரவுமே சரியான தீர்வாக அமையும் என்று அவர்குறிப்பிட்டார். ம.இ.கா. வழக்கறிஞர்கள் குழு மலேசியஇந்து சங்கத்திற்குத் தேவையான சட்ட உதவிகளைவழங்கும்.

​மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் தங்ககணேசனும் அவர் தம் நிர்வாகத்தினரும் இவ்விவகாரத்தில் ஆக்கப்பூர்வமாகச் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் ம.இ.கா.  இந்தியசமுதாயத்தின் பாதுகாப்பு அரணாகத் திகழ்கிறது என்றார்.

​ம.இ.கா.வில் அனைத்து சமயத்தினரும் இடம்பெற்றிருக்கின்றனர். அவர்கள் அனைவரது நலன்களைக்காக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு ம.இ.கா.வுக்கு உண்டு. அவ்வகையில் இந்துசமயத்தைத் தொடர்ந்து இழிவுபடுத்தியும்  நையாண்டி செய்தும் வரும்  ஸம்ரி வினோத்போன்ற பிரச்சாரகர்களுக்கு எதிராக  உரிய நடவடிக்கைஎடுக்கப்படுவதை ம.இ.கா. உறுதி செய்யும்.

​அவ்வகையில்  மலேசிய இந்துக்களின் நலன்களைக்காக்கும்  மலேசிய இந்து சங்கத்திற்கு  ம.இ.கா. பக்கபலமாக இருந்து தேவையான உதவிகளை வழங்கும். ம.இ.கா. வழக்கறிஞர் குழுவினர் இதற்குத் தயாராகஇருக்கின்றனர்.

​இந்து சமயம் இழிவுபடுத்தப்படுவதை ம.இ.கா.  இனியும் சகித்துக் கொள்ளாது. வேடிக்கையும் பார்த்துக்கொண்டிருக்காது என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் திட்டவட்டமாகக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here