துருக்கியே அண்டலியாவில் வெள்ளிக்கிழமை நடந்த கேபிள் கார் விபத்தில் மலேசியர்கள் யாரும் சிக்கவில்லை என்று மலேசிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. விஸ்மா புத்ரா அங்காராவில் உள்ள மலேசிய தூதரகம் மற்றும் இஸ்தான்புல்லில் உள்ள தூதரகம் மூலம், கேபிள் கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு மேலும் 10 பேர் காயமடைந்தத சம்பவத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகக் கூறியது.
அங்காராவில் உள்ள மலேசிய தூதரகம் உள்ளூர் அதிகாரிகளுடன் கூடுதல் தகவல்களைப் பெறுவதற்கான முயற்சிகளை தீவிரமாக ஒருங்கிணைத்து வருகிறது என்று விஸ்மா புத்ரா கூறியது. தூதரக உதவி தேவைப்படும் மலேசியர்கள் அங்காராவில் உள்ள மலேசிய தூதரகத்தை Koza Sokak No. 56, Gaziosmanpasa Cankaya, Ankara தொலைபேசி எண்: 00 (90-312) 44635 47 / 48 00 (90 – 5078128406) மின்னஞ்சல் [email protected] இல் தொடர்பு கொள்ளலாம். இஸ்தான்புல்லில் உள்ள மலேசிய துணைத் தூதரகத்தை Esentepe Mah எண்: 1/1B, Polat Plaza, B Blok,Kat 8, Levent/Sisli, Istanbul தொலைபேசி எண்: 00 (90-212) 989 10 01 அல்லது மின்னஞ்சல்: [email protected] இல் தொடர்பு கொள்ளலாம்.










