கெந்திங் ஹைலண்ட்ஸ் மலைப்பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

பகாங் பெந்தோங் செல்லும் சாலைக்கு அருகில் உள்ள கெந்திங் ஹைலேண்ட்ஸ் மலைப்பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை பிற்பகல் 3.40 மணியளவில் பொதுமக்களில் ஒருவர் இந்த சடலம் தொடர்பில் தகவல் தெரிவித்ததாக பெந்தோங் காவல்துறை தலைவர் சைஹாம் கஹர் தெரிவித்தார்.

உடல் பிரேத பரிசோதனைக்காக குவாந்தனில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தற்போது, பிரேத பரிசோதனை அறிக்கை நிலுவையில் இருப்பதால் இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றார். இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here