தொடர்ந்து அதிகரிக்கும் தங்கத்தின் விலை; இந்திய சமூகத்தினர் கவலை

கோலாலம்பூர்:

திருமணங்கள் போன்ற மங்களகரமான நிகழ்வுகளின் போது, குறிப்பாக இந்திய சமூகத்தினருக்கு தங்க நகைகள் மற்றும் அணிகலன்கள் பிரதானமாக இருப்பதால், ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு பல குடும்பங்களுக்கு பெரும் சுமையாக மாறும் என்று நம்பப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை, தங்கத்தின் விலை கிராமுக்கு RM360ஐ எட்டியது. இந்நிலையில் தங்கத்தின் விலை குறைவதற்கான எந்த அறிகுறியும் இல்லாது இருப்பதாகவும், இது தொடர்ந்து உயரும் என்றும் பலர் நினைக்கிறார்கள்.

பொதுவாக மே மாத இறுதியில் அதாவது தமிழ் மாதமான சித்திரைக்குப் பிறகு திருமண சீசன் தொடங்கும்.

இந்த காலகட்டத்தில் பல குடும்பங்கள் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முடிப்பதில் மும்முரமாக இருப்பார்கள், இந்த முக்கியமான நேரத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயரும் என்று அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here