தி கோட் படத்தின் முதல் பாடலில் விஜய் மைக் சின்னத்தை வைத்து பாடியதால் பெரும் பரபரப்பு.

மக்களவைத் தேர்தலுக்காக தமிழ்நாடு முழுவதும் பெரும் தேர்தல் பிரச்சாரங்கள் பறந்துகொண்டிருக்கும் நிலையில் நடிகர் விஜய்யின் தி கோட் பட ஓடியோ வெளியீடு திமுக, அதிமுக, பாஜக போன்ற பலம் வாய்ந்த அரசியல் கட் சிகளை அதிரவைத்திருக்கிறது. அந்தப் பாடலில் செந்தமிழன் சீமானின் நாம் தமிழர் கட்சியின் மைக் சின்னத்தை மையப்படுத்தி “Champaign- A – Dhan தான் தொடங்கட்டுமா, மைக்கை கையில் எடுக்கட்டுமா” என்ற வரிகளில் நடிகர் விஜய், சீமானை நேரடியாக ஆதரிப்பதாகவும் தனது ரசிகர்களை நாம் தமிழர் கட்சிக்கே வாக்களிக்க மறைமுகமாக சொல்வதாகவும் விமர்சனங்கள் வைரலாகி வருகின்றன.

தமிழகத்தில் மிகப் பெரும் பலம் வாய்ந்த திமுக, அதிமுக, பாஜக ஆகிய 3 முக்கிய பெரும் கட்சிகள் தம்முடன் பல்வேறு சிறிய கட்சிகளை இணைத்து பெரும் கூட்டணியாக தேர்தலுக்கு தயாராகிக்கொண்டிடுக்கும் இந்நிலையில், நாம் தமிழர் கட்சி மட்டுமே தனித்து களமிறங்கின்றது. எனினும் அக்கட்சியின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு மக்கள் படையெடுத்துக் கொண்டிருக்கும் இந்நிலையில் தமிழ்நாட்டின் உச்ச நட்ச்சத்திரமான நடிகர் விஜய்யின் இந்த பாடலும், அந்த காணொளியில் பெரிதாக காண்பிக்கப்படும் மைக் சின்னமும் நாம் தமிழர் கட்சியை பெரும் உற்சாகப்படுத்தியிருக்கிறது.

தி கோட் படத்தின் முதல் பாடலில் விஜய் மைக் சின்னத்தை வைத்து எங்களுக்கு மறைமுக ஆதரவை கொடுத்துள்ளார் விஜய், நிஜ சூப்பர் ஸ்டாரான விஜய் 150 கோடி சம்பளத்தை விட்டுவிட்டு மக்களுக்காக வருகிறார் அவரை நாங்கள் வரவேற்கிறோம் என நாம் தமிழர் கட்சி அறிக்கையும் வெளியிட்டிருக்கிறது.

விஜய்யின் குரலில் , யுவன் சங்கர் ராஜாவின் இசையில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இந்த பாடல், வெளியான சில மணி நேரங்களிலேயே பல கோடி பார்வைகளைக் கடந்து யூட்யூபில் சாதனை படைத்து வருகிறது எனப்து குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here