ஸ்ரீ ராம நவமி விழா

ஸ்ரீ ராம பிரான் அவதரித்த தினத்தை ராம நவமியாக நாம் ஆண்டுதோறும் கொண்டாடி மகிழ்கிறோம். வசந்த காலத்தின் துவக்கமாகவும், தமிழ் புத்தாண்டில் முதல் பண்டிகையாகவும் வருவது ராம நவமி தினமாகும். வசந்த நவராத்திரியின் நிறைவு நாளில் ராம நவமி தினம் கொண்டாடப்படுவதால் இதை ராம நவராத்திரி என்றும் சொல்லுவதுண்டு. மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ராம அவதாரம் மற்றும் கிருஷ்ண அவதாரத்தின் தினங்கள் மட்டுமே மிகப் பெரிய விழாவாக நாடு முழுவதும் கொண்டாடப்படுவது வழக்கம்.

ராம பிரானின் நற்குணங்களை அனைவரும் பெற வேண்டும். ராமரின் அருளை பெற வேண்டும் என்பதற்காகவும், ராமரின் பெருமைகளை அனைவும் நினைவில் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடனேயே ஆண்டுதோறும் ராம நவமி விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ராமர் அவதரித்த அயோத்தி நகரில் ராம நவமி விழா, பெரும் விழாவாக கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. மகாவிஷ்ணுவின் ஏழாவது அவதாரமாகவும், முதல் முழு மனித வடிவ அவதாரமாகவும் கருதப்படுவது ஸ்ரீராம அவதாரம் ஆகும்.

ஸ்ரீராம பிரான் அவதரித்த தினத்தையே நாள் ஸ்ரீராம நவமியாக நாம் ஆண்டுதோறும் கொண்டாடுகிறோம். ஸ்ரீராமர் 12,00,000 ஆண்டுகளுக்கு முன் தியேதா யுகத்தில் அவதரித்ததாக புராணங்கள் சொல்கின்றன. ராமாயண மகா காவியத்தின் நாயகனாகவும் ஸ்ரீராமரே போற்றப்படுகிறார். மூன்று வேதங்களையும் சொன்ன பலனை தரக் கூடியது ஸ்ரீராம நாமம் என்பதாலும், பாவங்களை போக்கக் கூடியது என்பதாலும் ராம நாமம் மிகவும் உயர்ந்த மந்திரமாக போற்றப்படுகிறது. இந்த ஆண்டு ஸ்ரீராம நவமி விழா ஏப்ரல் 17ம் தேதி புதன்கிழமை வருகிறது. ஸ்ரீராமர் அவதரித்தது சித்திரை மாத வளர்பிறை நவமி திதியில் என சொல்லப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு மே 16ம் தேதி மாலை 05.47 மணிக்கே நவமி திதி துவங்கி விடுகிறது.

மே 17ம் தேதி இரவு 7 மணி வரை மட்டுமே நவமி திதி உள்ளது. ராம நவமி பூஜை செய்வதற்கு ஏற்ற நேரமாக காலை 09.30 மணி முதல் 10.30 வரையிலான நேரமும், மாலை 04.30 முதல் 05.30 வரையிலான நேரம் சொல்லப்பட்டுள்ளது. ராம நவமியன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, வீட்டில் ஸ்ரீராமர் பட்டாபிஷேக படத்தை வைத்து, பூக்கள் சூட்டி அலங்கரிக்க வேண்டும். பிறகு ஸ்ரீராமருக்கு பிரியமான வெண் பொங்கல், பருப்பு வடை, நீர் மோர், பானகம் ஆகியவற்றை செய்து படைக்கலாம்.

எதுவும் முடியாதவர்கள் எளிமையாக இரண்டு வாழைப்பழம், ஒரு டம்ளர் பால் அல்லது நீர்மோர் வைத்து ராமருக்கு படைக்கலாம். அப்படி படைக்கும் போது “ராம்…ராம்” என ராம மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். அன்று நாள் முழுவதுமே ராம நாமத்தை சொல்லிக் கொண்டே இருப்பது சிறந்தது. அன்றைய தினம் அருகில் உள்ள ராமர் கோவில் அல்லது பெருமாள் கோவிலுக்குசென்று வழிபடலாமம். அப்போது மறக்காமல் துளசி மற்றும் தாமரை ஆகியவற்றை ராமருக்கு வாங்கி படைக்க வேண்டும். கோவில் வாசலில் நின்று, அங்கு வருபவர்களுக்கு நீர் மோர் தானமாக கொடுத்து, அவர்களின் தாகத்தை தணிக்கலாம். குடை, விசிறி போன்றவற்றையும் வாங்கி தானமாக கொடுக்கலாம்.

ராம நவமி அன்று பூஜை செய்யும் போதும் சரி, தானம் கொடுக்கும் போதும் சரி ராம நாமம் சொல்லிக் கொண்டே இருங்கள். ராம்…ராம் என சொல்லிக் கொண்டே உங்களின் கோரிக்கைகள் எதுவும் அதை ராமரிடம் முன் வைக்கலாம். பல நாட்களாக நீங்கள் நடக்க வேண்டும் என நினைக்கும் விஷயம், நடக்கும் என நினைத்து நடக்காமல் தள்ளி போகும் அல்லது நடக்காமல் இருக்கும் விஷயங்கள், உங்களின் பிரச்சனைகள், கோரிக்கைகள் என எதுவாக இருந்தாலும் மேலே குறிப்பிட்ட நேரத்தில் ராம நவமி பூஜை செய்து, ராமரை வழிபட்டால் உங்களின் கோரிக்கைகளுக்கு நிச்சயம் ராமர் செவி சாய்த்து அவற்றை நிறைவேற்றி வைப்பார் என்பது நம்பிக்கை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here