வரலாற்று சாம்பியன்!   திடலில் குதித்த ஆயிரக் கணக்கான ரசிகர்கள் 

 

ஜெர்மன் கால்பந்து லீக் பண்டஸ்லிகா இறுதி ஆட்டத்தில் பாயர் லெவர்குசென் அணி வெற்றி பெற்று, 120 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக சாம்பியன் ஆனது.

பண்டஸ்லிகா கால்பந்து  இறுதிப்போட்டி பேஅரேனா லீக் மைதானத்தில் நடந்தது. இதில் பாயர் லெவர்குசென், வெர்டெர் அணிகள் மோதின.

ஆட்டத்தின் 25ஆவது நிமிடத்தில் விக்டர் போனிபேஸ் பெனால்டி வாய்ப்பில் கோல்  அடித்தார். அதன் பின்னர் க்ரானித் ஸாகா 60ஆவது நிமிடத்தில் தனது அணிக்காக இரண்டாவது கோல் அடித்தார்.

அதனைத் தொடர்ந்து மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிளோரியன் விர்ட்ஸ்  ஹாட்ரிக் கோல் (68, 83, 90ஆவது நிமிடம்) அடித்தார்.

ஆனால் வெர்டெர்  அணி இறுதிவரை ஒரு கோல் கூட அடிக்காததால் பாயர் லெவர்குசென் அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இதன்மூலம் 120 ஆண்டுகால பண்டஸ்லிகா வரலாற்றில் முதல் முறையாக பாயர் லெவர்குசென் அணி சாம்பியன் பட்டதை வென்று சாதனை படைத்துள்ளது.

லெவர்குசென் அணி வெற்றி பெற்றபோது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திடலில் இறங்கி வீரர்களை சூழ்ந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here