2 ஆக உடையும் ஆப்பிரிக்க கண்டம்? இந்தியாவுடன் மோதும் ஒரு பாதி?

 

ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிரிய தொடங்கி உள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்து உள்ளனர். இதனால் உருவாகும் புதிய மலைகள் காரணமாக கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா குளிர் பிரதேசங்களாக மாறும்.  காஷ்மீர் போல மாறும், உலகில் மிக மிக அரிதாக நடக்கும் சம்பவம் இது என்று அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு காலத்தில் வேறு வேறு தோற்றத்தில் இருந்த நிலப்பரப்புகள் நிலநடுக்கம், சுனாமி, நில அடுக்கு நகர்வுகள், எரிமலை வெடிப்புகள் காரணமாக உருமாற்றம் அடைந்து தற்போது இருக்கும் தோற்றத்தை பெற்றுள்ளது.இதன் காரணமாகவே வேறு வேறு நிலப்பரப்புகள் ஒன்றுடன் ஒன்று மோதி தற்போது இருக்கும் 7 கண்டங்கள் உருவாகின.

நிலப்பரப்புகள் மோதியதால் மட்டுமே தற்போது இருக்கும் பல்வேறு மலைகளும் கூட தோன்றின. இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு ரயில் கடல் பாலம், ராமேஸ்வரத்தின் பெருமையை இனி உலகம் பேசும் ஆப்பிரிக்க கண்டம்: அந்த வகையில் தற்போது இருக்கும் ஆப்பிரிக்க கண்டம் பிரிய தொடங்கி உள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

இது இரண்டாக கொஞ்சம் கொஞ்சமாக பிரிந்து வருவதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த நிலப்பரப்பு பிரியும் பகுதியில் நீர் புகுந்து அங்கே பெரிய கடல் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர். தற்போது ஆப்பிரிக்க கண்டத்தில் இருக்கும் ஸாம்பியா, உகாண்டா பிரிந்து சென்று இடையில் கடல் பகுதிகள் வரலாம் என்று அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 ஒரு நில அடுக்கு பிரிந்து இரண்டாக, மூன்றாக அல்லது அதற்கும் மேலாக மாறுவதை ரிப்ட் என்று கூறுவார்கள். அதாவது ஒரு தட்டு உடைந்து இரண்டாக மாறுவது. இதற்கு இடையில் தண்ணீர் புகுந்தால் அது இரண்டு நாடுகளாக, இரண்டு பகுதிகளாக மாறிவிடும் . இதுவாக இரண்டு தட்டுகள் நகர பல நூறு ஆண்டுகள் எடுக்கும். ஆனால் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படும் பட்சத்தில் இந்த நகர்வு வேகமாக நடக்கும் வாய்ப்புகளும் உள்ளன. இப்படி தட்டுகள் நகரும் இடைப்பட்ட இடைவெளியில் பொதுவாக கடல் நீர் நுழைவது வழக்கம். எப்படி நகருகிறது:

அப்படித்தான் கடல்கள் உருவாகும். தற்போது கிழக்கு ஆப்பிரிக்காவில் இந்த ரிப்ட் ஏற்பட்டு உள்ளது. அதன்படி 56 கிலோ மீட்டர் தூரத்திற்கு நில தட்டுகள் நகர்ந்து உள்ளன. எத்தியோப்பியா பாலைவனத்தில் இந்த நில பிரிவு ஏற்பட்டு உள்ளது. இந்த பகுதியில் வரும் வருடங்களில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் புகுந்து அது கடலாக மாறும். இங்கே இருக்கும் மூன்று நில அடுக்குகள் ஏற்கனவே பிரிய தொடங்கி விட்டனவாம். அஞூணூடிஞிச்ண ‡தஞடிச்ண, அஞூணூடிஞிச்ண குணிட்ச்டூடி, அணூச்ஞடிச்ண ஆகிய அடுக்குகள் பிரிய தொடங்கி உள்ளன. இவை சாட்டிலைட்டில் மட்டுமன்றி கண்ணால் பார்க்கும் அளவிற்கு பிளவு தென்பட தொடங்கி உள்ளது.

 கேரளா மாறும்: இதனால் ஆப்பிரிக்க கண்டத்தின் ஒரு பகுதி இந்தியாவின் அரபிக்கடல் பகுதியில் இருக்கும் மாநிலங்களோடு மோதும். இதனால் உருவாகும் புதிய மலைகள் காரணமாக கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா குளிர் பிரதேசங்களாக மாறும். காஷ்மீர் போல மாறும். ஆனால் இவை எல்லாம் நடக்க சில லட்ச வருடங்கள் ஆகும்.

புதிய நாடுகள் உருவாகும்: தற்போது ஆப்பிரிக்க கண்டத்தில் இருக்கும் ஸாம்பியா, உகாண்டா பிரிந்து சென்று இடையில் கடல் பகுதிகள் வரலாம் என்று அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இது மொத்தமாக பிரிய இன்னும் சில நூறு ஆண்டுகள் ஆகும். பெரிய அளவில் நிலநடுக்கங்கள் ஏற்படும் பட்சத்தில் இது வேகமாக நடக்கலாம்.

ஆனாலும் அடுத்த 50,000 வருடங்களில் இந்த புதிய கடல் தோன்ற வாய்ப்பு இல்லை. கொஞ்சம் கொஞ்சமாகவே இது நடக்கும். ஏதாவது மிகப்பெரிய நிலநடுக்கம், சுனாமி எல்லாம் ஒரே நாளில் ஏற்பட்டால் திடீர் மாற்றங்கள் இதில் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here