மாலத்தீவு அதிபராக மீண்டும் அமோக வெற்றியை பெற்ற முய்சு

மாலே:

மாலத்தீவு நாட்டில் நேற்று முன்தினம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றறது. இந்த தேர்தலில் சீனாவின் ஆதரவை பெற்றவரான அதிபர் முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சியானது 93 இடங்களில் 68 இடங்களில் வெற்றி பெற்றது.

எதிர்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று பெரும்பான்மையை இழந்தது.

முய்சு கட்சி வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையானது நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்காகும். இந்த வெற்றியை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அதிபர் முய்சு விரும்பும் சட்டங்களை எளிதாக கொண்டு வரமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here