கோலாலம்பூர்:
மலேசிய இந்திய மக்கள் கட்சியின் இணைவால் பெர்சத்து கூட்டணியின் சயாப் பிரிவினர் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும், இதனால் கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டுளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை, மலேசிய இந்திய மக்கள் கட்சி பெர்சத்து தேசிய கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தது.
இந்நிலையில் தேசியக் கூட்டணியில் புதிய கட்சி இணைத்துக் கொள்ளப்பட்டது பெர்சத்துவின் சயாப் பிரிவுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாகவும், இது கூட்டணியை வேறு ஒரு புதிய பரினாமத்திற்கு வழிவகுக்கும் என்றும் அப்பிரிவைச் சேர்ந்த பேர் குறிப்பிடாத பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன்மூலமாக சயாப் பிரிவில் உள்ள ஒட்டுமொத்த இந்திய தலைவர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும், புதிய இந்திய கட்சியின் வரவு குறித்து சயாப் பிரிவிடம் கட்சி தலைமைத்துவம் எதுவும் கலந்தாலோசிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் சயாப் பிரிவை கட்சியின் தலமைத்துவம் கண்டுகொள்ளாதது அவர்களின் தன்மானத்தை தூண்டிவிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.