புதிய தலைமை கணக்காய்வாளராக வான் சுரயா நியமனம்

மலேசிய நன்னெறி கழகத்தின் தலைமை நிர்வாகியான டத்தோ வான் சுரயா வான் முகமட் ராட்ஸி, புதிய தலைமை கணக்காய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அரசின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமட் ஜூகி அலி தெரிவித்தார்.

கூட்டாட்சி அரசியலமைப்பின் பிரிவு 105(1) இன் படி நியமனம் செய்யப்பட்டதாகவும், ஆட்சியாளர்களின் மாநாட்டின் ஆலோசனைக்குப் பிறகு மேன்மை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷாவின் ஒப்புதலைப் பெற்றதாகவும் ஜூகி கூறினார்.

“அவரது தலைமைத்துவ குணங்கள் மற்றும் அவரது 29 வருட பொதுச் சேவையில் கொண்டுள்ள பரந்த அனுபவத்தின் அடிப்படையில் அவரது நியமனம் அமைந்தது” என்று ஜூகி நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரியில் தலைமை கணக்காய்வாளர் ஒப்பந்தம் முடிவடைந்த டத்தோஸ்ரீ நிக் அஸ்மான் நிக் அப்துல் மஜிட்டுக்குப் பதிலாக, மூன்று மாத இடைவெளிக்குப் பின்னர் வான் சுரயா அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here