கோல குபு பாரு இடைத்தேர்தல்: MACCயின் 24 மணி நேர செயல்பாட்டு அறை

உலு சிலாங்கூர்: கோல குபு பாரு இடைத்தேர்தலில் ஊழல் செயல்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் பற்றிய தகவல்களையும் புகார்களையும் பொதுமக்கள் புகாரளிக்க மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (MACC) செயல்பாட்டு அறையைத் திறந்துள்ளது. சிலாங்கூர் ஷா ஆலமில் உள்ள அதன் அலுவலகத்தில் அமைந்துள்ள செயல்பாட்டு அறை இன்று முதல் வாக்குப்பதிவு நாள் மே 11 ஆம் தேதி வரை 24 மணி நேரமும் திறந்திருக்கும் என்று எம்ஏசிசி தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் தங்கள் புகார்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் அல்லது 03-55256500 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்” என்று அது ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. எம்ஏசிசி சட்டம் 2009 மற்றும் தேர்தல் குற்றச் சட்டம் 1954 ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்தல் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மீறும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று அனைத்து வேட்பாளர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் அது நினைவூட்டுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here