குவாங்ஸொ:
தென் சீனாவின் குவாங்ஸொ நகரில் ஏற்பட்ட சூறாவளியில் ஐவர் உயிரிழந்துள்ளத்துடன் 33 பேர் காயமடைந்துள்ளதாக ஸின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சூறாவளி சனிக்கிழமை மதியம் நகரின் ‘பையுன்’ மாவட்டத்தைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது. 141 தொழிற்சாலைக் கட்டடங்கள் சேதமுற்றன.
இருப்பினும், எந்தவொரு குடியிருப்பு வீடும் இடிந்து விழவில்லை என்றது செய்தி நிறுவனம்.
நகரின் அவசர மீட்பு நிர்வாகத்தைச் சேர்ந்த மீட்புப் பணியாளர்கள் , வானிலை, தீயணைப்பு, சுகாதாரத் துறை அதிகாரிகள், உள்ளூர்க் குடியிருப்பாளர்கள் அந்தப் பகுதிக்கு அனுப்பப்பட்டதாகக் கூறிய ஸின்ஹுவா நிறுவனம், அங்கு தேடல் மீட்புப் பணிகள் முடிவுற்றதாகத் தெரிவித்தது.
சென்ற ஆண்டு, சீனாவின் தென்கிழக்குப் பகுதியில் பெய்த கனமழையைத் தொடர்ந்து, ஜியாங்சு மாநிலத்தைத் தாக்கிய கடும் சூறாவளியில் பத்து பேர் உயிரிழந்தனர். ஹாய்குவி சூறாவளி கொண்டுவந்த கடும் புயலினால் நிலச்சரிவுகளும் ஏற்பட்டிருந்தன.
அப்போது மக்களை வெளியேற்றும் பணி பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டது.