கோத்த கினபாலு: தனது தந்தையின் துப்பாக்கியை கொண்டு சொந்தமாக சுடப்பட்டு இறந்த லஹாட் டத்து காவல்துறைத் தலைவரின் மகளுடைய கைப்பேசியின் உள்ளடக்கங்களை காவல்துறை தடயவியல் பிரிவு ஆய்வு செய்து வருகிறது. சபா போலீஸ் கமிஷனர் டத்தோ ஜௌதே டிகுன் கூறுகையில், போலீசார் இன்னும் வழக்கை விசாரித்து வருகின்றனர்.
செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 30) நகர காவல்துறை தலைமையகத்தில், தொலைபேசியில் உள்ள உள்ளடக்கத்தை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். லஹாட் டத்து மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் துல்பஹாரின் இஸ்மாயில், தனது 14 வயது மகள் விபத்தில் இறந்தது தொடர்பில் அலட்சியமாக இருந்ததற்காக விசாரிக்கப்பட்டு வருவதாக கூறியதை சபா காவல்துறை ஆணையர் டத்தோ ஜௌதே ஜிகுன் தெரிவித்தார்.
ஏப்ரல் 16 ஆம் தேதி, லஹாட் டத்து காவல்துறைத் தலைவர் ஏசிபி துல்பஹாரின் மகள் தாமான் தபானக்கில் உள்ள அவர்களது வீட்டில் இறந்து கிடந்தார். அவள் தந்தையின் துப்பாக்கியில் இருந்து வெளிவந்தம் குண்டு காயத்தால் அவள் இறந்துவிட்டார் என்று நம்பப்படுகிறது. வீட்டில் பூட்டிய அலமாரியில் கைத்துப்பாக்கி பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.