உலு சிலாங்கூர்:
கோலா குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் (PRK) தபால் மூலம் வாக்களிக்கும் உரிமையுள்ள வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் (SPR) 188 தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது.
தேர்தல் அதிகாரிகள், தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் அல்லது அதிகாரிகள், போலீஸ்காரர்கள், ராணுவ வீரர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் என மொத்தம் 178 பேருக்கு வாக்குச் சீட்டுகள் வகை 1A-க்காக வழங்கப்பட்டதாக தேர்தல் ஆணையத்தின் செயலாளர் டத்தோ இக்மல்ருடின் இஷாக் கூறினார்.
“வகை 1B -வெளிநாட்டில் உள்ள மலேசியர்கள் மொத்தம் எட்டு அஞ்சல் வாக்குகளளும்; 1C (ஏஜென்சிகள் மற்றும் நிறுவனங்கள்) மற்றும் வெளிநாடுகளில் இல்லாத வாக்காளர்களுக்கு (PTH) என ஒரூ தபால் வாக்களிப்பு சீட்டும் ஒதுக்கப்பட்டதாக அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.























