மேட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் நம்பர் 3 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ரஷியாவின் ஆன்ட்ரே ரூப்லெவுடன் மோதினார்.
இதில் ரூப்லெவ் 4-6 என முதல் செட்டை இழந்தார். இதனால் சுதாரித்துக் கொண்ட அவர் அடுத்த இரு செட்களை 6-3, 6-2 என வென்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் அரையிறுதியில் ரூப்லெவ், அமெரிக்க வீரர் டெய்லர் பிரிட்சுடன் மோதுகிறார். இன்று இரவு நடைபெறும் முதல் அரையிறுதியில் மெத்வதேவ் செக் வீரர்
ஜிரி லெஹ்காவை சந்திக்கிறார்.