மாமன்னரின் புகைப்படத்தை தவறாக பயன்படுத்தியதாக இருவர் கைது

கோல குபு பாருவை சுற்றி  மாமன்னர்  சுல்தான் இப்ராஹிம் மற்றும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆகியோரின் உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்ததோடு பல கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த வாகனம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். தேச துரோகச் சட்டம் 1948 மற்றும் தேர்தல் குற்றச் சட்டம் 1954 ஆகியவற்றின் கீழ் அவர்கள் விசாரிக்கப்பட்டு வருவதாக உலு சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் அஹ்மத் பைசல் தஹ்ரிம் கூறினார்.

நேற்று மாலை 6.18 மணியளவில், கோல குபு பாருவில் வசிக்கும் ஒருவர்  உள்ளூர் காவல் நிலையத்தில் வாகனத்தில் இருக்கும் புகைப்படம் மாமன்னரை அவமதிக்கும் வகையில் இருக்கிறது என்று புகார் அளித்திருந்தார். பைசலின் கூற்றுப்படி, புகார்தாரர் ஒரு பச்சை நிற 4WD வாகனத்தை இரண்டு ஆண்கள் நகரத்தில் சுற்றி வருவதாகக் கூறினார். அந்த வாகனத்தில் மாமன்னர் மற்றும் அன்வரின் படங்களும், ஜோகூர் மாநிலம் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் (PH) கொடிகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

தேர்தல் குற்றச் சட்டம் 1954 இன் பிரிவு 4a மற்றும் தேசத் துரோகச் சட்டம் 1948 இன் பிரிவு 4(1) ஆகியவற்றின் கீழ் தவறான அறிக்கையை வழங்குவதற்கான கோப்பு திறக்கப்பட்டுள்ளது. 60 வயதுடைய இரண்டு உள்ளூர் ஆடவர்கள் கைது செய்யப்பட்டு மே 7 வரை காவலில் வைக்கப்பட்டுள்ளனர். வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று பைசல் கூறினார். கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவருக்கு முந்தைய குற்றப் பதிவுகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், PH மற்றும் Perikatan Nasional (PN) ஆகிய இரு கட்சிகளும்  இந்த சம்பவத்திற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று கூறியிருக்கிறது. கோல குபு பாரு PH தேர்தல் இயக்குனர் Ng Sze Han, வாகனம் தனக்கு சொந்தமானது என்ற கூற்றை மறுத்ததாக நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனால் நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம். இதற்கும் எங்கள் பிரச்சாரக் குழுவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று என்ஜி மேற்கோள் காட்டினார். இதேபோல், பெர்சத்துவின் அசோசியேட் பிரிவின் தலைவர் சோங் ஃபட் ஃபுல், PN ஒரு போலீஸ் புகாரை பதிவு செய்து தேர்தல் கமிஷன் விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது என்றார். இது நடக்கக் கூடாது. மாமன்னரின் படத்தை PH உடன் தொடர்புடையது போல் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் மாமன்னரின் அனுமதியைப் பெற்றனரா என்று  சோங் கேள்வி எழுப்பினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here