‘தாத்தா’ ஜனகராஜ் நீண்ட இடைவேளைக்குப் பின்னர் கம்பேக் கொடுத்தவரின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல்!

நடிகர் ஜனகராஜ் நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிப்புத் துறைக்கு திரும்பியிருக்கிறார். ‘தாத்தா’ என்ற குறும்படத்தில் அவர் நடித்திருக்கிறார். அவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘கிழக்கே போகும் ரயில்’, ‘விக்ரம்’, ‘குணா’ உள்ளிட்டப் ஏராளமானப் படங்களில் நடித்தவர் ஜனகராஜ். நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தியவர். விஜய்சேதுபதியின் ‘96’, சாருஹாசனின் ’தாதா 87’ உள்ளிட்டப் படங்களில் நடித்தவர் இடையில் சினிமாவுக்கு பிரேக் கொடுத்தார்.

அவர் பற்றிய செய்திகள் அதிகம் வராமல் போகவே, ’ஜனகராஜ் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்? அமெரிக்காவில் செட்டில்டா?’ என ரசிகர்கள் கேட்டு வந்தனர். உடனே ‘நான் நலமுடன் சென்னையில்தான் இருக்கிறேன். அமெரிக்கா எல்லாம் போகவில்லை’ என்று பேட்டிக் கொடுத்தார்.

இப்படியான சூழ்நிலையில்தான், ‘தாத்தா’ என்ற குறும்படம் மூலமாக நடிப்புக்கு மீண்டும் கம்பேக் கொடுத்திருக்கிறார் ஜனகராஜ். வீட்டு காவலாளியாக பணிபுரியும் ஜனகராஜ் தனது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார். அப்போது ஒருநாள் வீட்டிற்கு வரும் பேரனின் வருகை அவரை சந்தோஷப்படுத்துகிறது. எப்போதாவது வீட்டிற்கு வரும் பேரன் ஆசைப்பட்டு பொம்மை கார் கேட்கிறான்.

video

அந்த கார் 800 ரூபாய் என்கிறார்கள். அதை வாங்குவதற்காக பல வருடங்களாக தான் ஆசையாய் வைத்திருக்கும் ஒரு பொருளை விற்க முடிவு செய்கிறார் ஜனகராஜ். அதை அவர் செய்தாரா? பேரனின் ஆசையை நிறைவேற்றினாரா என்பது தான் ‘தாத்தா’ கதை. நெகிழ்வான தருணங்களோடு கதையை நகர்த்தி சென்றிருக்கிறார் இயக்குநர் நரேஷ்.

நீண்ட நாள் கழித்து ஜனகராஜைப் பார்த்த ரசிகர்கள் அவரது புகைப்படத்தைப் பகிர்ந்து வருகின்றனர். ’ஆள் அடையாளமே தெரியாமல் மாறி விட்டாரே’ என்றும் கூறி வருகின்றனர். அடுத்தடுத்து படங்களிலும் அவர் ஆக்டிவாக நடிக்க வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here