கோத்தா கினாபாலு:
பள்ளி விடுதியில் வசித்த போது, தான் எதிர்கொண்ட பிரச்சினைகள் குறித்து ஸாரா கைரினா மகாதிர் ஒருபோதும் புகார் அளிக்கவில்லை என்று செக்கோலா மெனெங்கா கெபாங்சான் அகமா துன் டத்தோ முஸ்தபா, தலைமை வார்டன், மரண விசாரணை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஸாரா கைரினா ரபியத்துல் அதவியா பிளாக்கின் மூன்றாவது மாடியில் உள்ள குர்ரத்து அயூன் விடுதியில் 11 மாணவர்களுடன் தங்கியிருந்தார் எனவும், “ விடுதியில் அவர் எதிர்கொண்ட எந்தவொரு பிரச்சனைகள் தொடர்பில் ஸாரா கைரினாவிடமிருந்து எந்த புகாரும் வரவில்லை,” என்றும் அவரது அரபு ஆசிரியராகவும், தலைமை வார்டனாகவும் இருக்கும் அஷாரி அப்துல் சகாப், இன்று கூறினார்.
ஜூலை 16 அன்று அதிகாலை 3.04 மணிக்கு பள்ளியின் பாதுகாப்புக் காவலரிடமிருந்து சம்பவம் தொடர்பான தகவல் வந்தது. விடுதி கட்டிடத்தை அடைந்த போது, ஸாரா கைரினா ஒரு வடிகாலில் மயக்கமடைந்து குறட்டை போன்ற சத்தத்துடன் சுவாசிப்பதை அஷாரி கண்டார். அவரருகில் ஐந்து மாணவர்களும் பாதுகாப்புக் காவலரும் இருந்தனர்.
ஸாராவை நகர்த்தும்போது வடிகாலின் ஓரத்தில் இரத்தக் கறைகள் மற்றும் அவரது கணுக்காலில் காயங்கள் இருந்தன. உடனடியாக அதிகாலை 3.17 மணிக்கு அவசர எண் 991க்கு அழைத்து மருத்துவ உதவி கோரப்பட்டது. அதன் பிறகு சம்பவத்தை பள்ளி முதல்வருக்கும், ஸாரா கைரினாவின் பெற்றோர்களுக்கும் தெரிவிக்க முயன்றார், ஆனால் அவசரநிலையில் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதிகாலை 4 மணிக்கு ஆம்புலன்ஸ் வந்து ஸாராவை மருத்துவமனையில் கொண்டு சென்றது.
பின்னர் தலைமை வார்டன் என்ற அடிப்படையில், சம்பவம் குறித்து கோத்தா கினாபாலு மாவட்ட காவல் தலைமையகத்தில் தான் ஒரு புகாரையும் பதிவு செய்தார் என்று அவர் சொன்னார்.
ஆனால் ஜூலை 17 அன்று குயின் எலிசபெத் மருத்துவமனையில் ஸாரா கைரினா உயிரிசந்தார்; அதே நாளில் சிபிடாங்க் தஞ்சோங் உபி முஸ்லிம் கல்லறையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
குறித்த வழக்கு தொடர்பான மரண விசாரணை கடந்த ஆகஸ்ட் 8 முதல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.





















