கோத்தா திங்கி:
இன்று காலை 8 மணி நிலவரப்படி, இம்மாவட்டத்தில் 69 குடும்பங்களைச் சேர்ந்த 300 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட அனைவரும் கம்போங் தெமெனின் பாரு மற்றும் கம்போங் டேசா மக்மூர் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என்று ஜோகூர் மாநில அரசு செயலாளர் டான்ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரோஹானி தெரிவித்தார்.
“இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ச்சியான கனமழை பெய்ததைத் தொடர்ந்து, செக்கோலா கெபாங்சான் புக்கிட் லிண்டாங்கில் நேற்று ஒரு நிவாரண மையம் திறக்கப்பட்டது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.





















