முன்னாள் பிரதமரின் வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது

முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினின் வாட்ஸ்அப் கணக்கு இன்று ஹேக் செய்யப்பட்டது. அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதியம் 12 மணி முதல் தனது கைபேசி ஹேக் செய்யப்பட்டதாகக் கூறியுள்ளார்.

இந்த நேரத்திற்குப் பிறகு அவரது கணக்கிலிருந்து செய்திகளைப் பெறுபவர்களை பதிலளிக்க வேண்டாம் என்று நாங்கள் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். காவல்துறையில் புகார் தாக்கல் செய்யப்படும். நாங்கள் தற்போது அவரது வாட்ஸ்அப் கணக்கை மீண்டும் செயல்படுத்தி வருகிறோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here