குவந்தான் மற்றும் ரொம்பினைச் சுற்றியுள்ள குடிநுழைவு துறை சோதனை; 74 கள்ளக்குடியேறிகள் கைது

ஜெரான்டுட்:

கடந்த புதன்கிழமை குவந்தான் மற்றும் ரொம்பினைச் சுற்றியுள்ள பல இடங்களில் குடிநுழைவு துறை நடத்திய சோதனையில், நாட்டில் சட்டவிரோதமாக வேலை செய்ததாக சந்தேகிக்கப்படும் 74 சட்டவிரோத குடியேறிகளை கைது செய்துள்ளனர்.

இந்த நடவடிக்கையில் தாய்லாந்து, இந்தோனேசியா, மியன்மார் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 150 பேர் பரிசோதிக்கப்பட்டதாகவும், அவர்களில் 74 பேர் குடிநுழைவுச் சட்டம் 1959/63-ன் கீழ் பல்வேறு குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டதாகவும் பகாங் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்வர்கள் 43 இந்தோனேசியர்கள், 25 பங்களாதேசிகள் மற்றும் 6 மியன்மார் நாட்டவர்கள் அடங்குவதாகவும், அனைவரும் 22 முதல் 51 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அது தெரிவித்துள்ளது.

குடிநுழைவு துறைக்கு கிடைத்த தகவலின் விளைவாக காலை 11.30 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த சோதனை நடத்தப்பட்டது.

கைது செய்யப்பட்ட அனைவரும் குடிநுழைவுச் சட்டம் 1959/63 இன் பிரிவு 51(5)(b) இன் கீழ் 14 நாட்கள் தடுப்புக்காவலில் வைப்பதற்காக கெமாயன் குடிநுழைவு டிப்போவுக்கு அனுப்பப்பட்டனர்,” என்று குடிநுழைவு துறை இன்று தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here