தீ விபத்தில் 95% அழிந்த வீடு: 80 வயது மூதாட்டி முதல் 6 மாத குழந்தை வரை காயமின்றி தப்பினர்

சிலாங்கூர், சுங்கை பெசாரில் ஒரு பலகை வீடு ஒன்று அதிகாலை தீப்பிடித்து எரிந்து நாசமானது. புதன்கிழமை (மே 22) அதிகாலை 3.17 மணிக்கு சுங்கை பெசாரில் உள்ள கம்போங் ஹலா காரா பாரு, சுங்கை பஞ்சாங்கில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

அதிகாலை 3.59 மணியளவில் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீயை அணைக்க சுமார் 90 நிமிடங்கள் ஆனது. மேலும் வீடு 95% எரிந்துவிட்டது  என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார். வீட்டில் இருந்த 80 வயதான மூதாட்டி, 33 வயதான ஆண், 32 வயதான பெண், ஏழு மற்றும் ஒன்பது வயதுடைய இரண்டு சிறுவர்கள் மற்றும் ஆறு மாத பெண் குழந்தை ஆகியோர் காயமில்லாமல் தப்பினர் என அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here