ஆறு பணியாளர்களைக் கொண்ட மலேசிய மருத்துவக் குழு ராஃபாவிலிருந்து மீட்கப்பட்டது- வெளியுறவு அமைச்சகம் தகவல்

கோலாலம்பூர்:

கடந்த ஒரு மாத காலமாக ராஃபாவில் சிக்கித் தவிக்கும் ஆறு பணியாளர்களைக் கொண்ட மலேசிய மருத்துவக் குழு அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக எனவெளியுறவு அமைச்சகம், விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.

குறித்த ஆறு மருத்துவப் பணியாளர்களும் கட்டம் கட்டமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாக விஸ்மா புத்ரா இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சில மருத்துவப் பணியாளர்கள் கடந்த மாதம், 23, 24, 28-ஆம் தேதிகளில் வெளியேற்றப்பட்ட நிலையில், நேற்று மே-31-ஆம் தேதி மேலும் இரு மருத்துவ உறுப்பினர்கள் ராஃபாவிலிருந்து வெளியேற்றப்பட்டனர் என்றும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஒத்துழைப்பையும் அர்ப்பணிப்பையும் வழங்கிய அனைத்து அனைத்துலக பங்காளிகளுக்கும் வெளியுறவு அமைச்சகம் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக அது அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here