கோலாலம்பூர்:
2025/2026 பள்ளி அமர்வின் முதல் நாளான இன்று, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் SK கம்போங் பாரு தேசிய பள்ளிக்கு திடீர் விஜயம் செய்தார்.

இன்று காலை 10 மணியளவில் குறித்த பள்ளிக்கு சென்ற பிரதமர், பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடியதுடன் அங்கு சுமார் 40 நிமிடங்கள் இருந்தார்.

இந்த 2025/2026 ஆண்டிற்கான பள்ளி அமர்வு, இன்று குழு B-யிலுள்ள 11 மாநிலங்களில் தொடங்கியது, இது கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் மாணவர்களை உள்ளடக்கியுள்ளது.

அதே நேரம் குழு A-க்காக அதாவது கெடா, திரெங்கானு மற்றும் கிளந்தான் ஆகிய மூன்று மாநிலங்களுக்கான பள்ளி அமர்வு சுமார் 632,260 மாணவர்களுடன் நேற்று ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது.

ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்கும் சிறந்த இடம் என்ற பெருமை பள்ளிகளையே சேரும். கல்வியே அனைவர் வாழ்விலும் வெற்றியைத் தரும் என்றும், சிறந்த மாணவர் சமூகத்தை உருவாக்க பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகிய அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் பிரதமர் இன்று தனது facebook பக்கத்தில் வெளியிட்டுள்ள ஓர் பதிவில் தெரிவித்தார்.





















