விபத்தில் சிக்கி 14 வயது சிறுவன் பலி

கோலாலம்பூர்: திங்கட்கிழமை (ஜூன் 3) காலை 6.45 மணியளவில் பத்து 9, ஜாலான் லாபு, நீலாய் என்ற இடத்தில் வாகனம் மோதிய விபத்தில் 14 வயது சிறுவன் உயிரிழந்தான். கம்போங் தெபிங்கில் இருந்து நீலாய் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சிறுவன்  விபத்துக்குள்ளானதாக நம்பப்படுவதாக நீலாய் மாவட்ட காவல்துறைத் தலைவர் அப்துல் மாலிக் ஹாசிம் தெரிவித்தார்.

அதே திசையில் இருந்து வந்த வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக நம்பப்படுகிறது. மேல்நிலைப் பள்ளி மாணவன் தலையில் பலத்த காயம் அடைந்தார். மேலும் நீலாய் சுகாதார கிளினிக்கின் துணை மருத்துவர்களால் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41(1)ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள், நீலாய் மாவட்ட காவல் நிலையத்தில் உள்ள போக்குவரத்து புலனாய்வு அதிகாரியை தொடர்பு கொள்ளுமாறு  அப்துல் மாலிக் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here