மாமன்னர் தம்பதியர் மாட்சிமை பொருந்திய சுல்தான் இப்ராஹிம் மற்றும் ராஜா ஜரித் சோபியா ஆகியோர் அனைத்து தந்தையர்களுக்கும் தங்கள் தந்தையர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 16) முகநூல் பதிவில மாமன்னர், தங்கள் குடும்பத்திற்காக சம்பாதிக்க வாழ்க்கையில் கடினமாக உழைக்கும் அனைத்து தந்தையர்களுக்கும், உங்கள் தியாகங்களை நான் மதிக்கிறேன்” என்று கூறினார்.
ஒரு தந்தையாக, குழந்தைகளின் வாழ்க்கையை வடிவமைப்பதில் ஒரு தந்தையின் பொறுப்பு மற்றும் முக்கிய பங்கை நான் புரிந்துகொள்கிறேன். அல்லாஹ் எனது மறைந்த தந்தை சுல்தான் இஸ்கந்தர் மற்றும் பேராக் மறைந்த சுல்தான், அவரது மாட்சிமை வாய்ந்த சுல்தான் இட்ரிஸ் ஷா II ஆகியோரையும் ஆசீர்வதிப்பாராக என்று மாமன்னர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.








