வங்கியில் இருந்து 24.2 மில்லியன் ரிங்கிட் களவு: மேலும் 5 பேர் கைது

சபா வங்கியில் பல சேமிப்புக் கணக்குகளில் இருந்து காணாமல் போன 24.2 மில்லியன் ரிங்கிட்  பொறுப்பான கும்பலுடன் தொடர்புடைய ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் ரம்லி யூசுப் கூறுகையில், வங்கி அதிகாரி மற்றும் மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாங்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறோம்  என்று அவர் கூறியதாக கோஸ்மோ  மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டிருந்தது. 24.2 மில்லியன் ரிங்கிட் இழப்புகள் தொடர்பாக ஜூன் மாத தொடக்கத்தில் பெட்டாலிங் ஜெயாவில் நான்கு புகார்கள் போலீசாருக்கு கிடைத்ததாக ரம்லி கூறினார்.

கணக்கு வைத்திருப்பவர்கள் மற்றும் வங்கி ஊழியர்களை உள்ளடக்கிய புகார்தாரர்கள், கோத்த கினாபாலுவில் வங்கியில் உள்ள பல சேமிப்புக் கணக்குகளை உள்ளடக்கிய பல சந்தேகத்திற்கிடமான பணம் திரும்பப் பெறப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

குற்றவியல் சட்டத்தின் 420ஆவது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here