உலு திராம் காவல் நிலைய தாக்குதல்: குடும்ப உறுப்பினர்கள் 5 பேர் மீது நாளை குற்றஞ்சாட்டப்படும்

கடந்த மாதம் ஜோகூர் உலு திராம் காவல் நிலையத்தின் மீது  இரண்டு காவலர்களைக் கொன்ற சந்தேக நபரின் குடும்ப உறுப்பினர்கள் ஐந்து பேர் மீது நாளை குற்றஞ்சாட்டப்படும். ஜோகூர் பாரு அமர்வு நீதிமன்றத்தில் நாளை காலை இந்த வழக்கை செய்தியாக்குவதற்காக ஜோகூர் காவல்துறை ஊடகங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

எவ்வாறாயினும், 19 மற்றும் 62 வயதுடைய குடும்ப உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் குற்றச்சாட்டுகளை போலீசார் வெளியிடவில்லை. மே 17 அன்று, 21 வயது சந்தேக நபர் துப்பாக்கி மற்றும் பராங் ஆயுதங்களுடன் காவல் நிலையத்திற்குள் நுழைந்து இரண்டு காவலர்களான அஹ்மத் அஸ்ஸா ஃபஹ்மி அசார் 22, மற்றும் சியாபிக் அஹ்மத் சைட் 24 கொல்லப்பட்டனர். அதிகாலை 2.45 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் மற்றொரு போலீஸ்காரர் காயமடைந்தார்.

சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்ட சந்தேக நபர் ஜெமா இஸ்லாமியாவின் (JI) உறுப்பினராக காவல்துறையால் சந்தேகிக்கப்பட்டது. ஆனால் உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் அந்த கூற்றை மறுத்தார். JI இணை நிறுவனர் அபு பக்கர் பஷீரும் இந்தத் தாக்குதலுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்று மறுத்தார். அதை அவர் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

சந்தேக நபரின் ஐந்து குடும்ப உறுப்பினர்களைத் தவிர, தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக சம்பவத்திற்கு சற்று முன்னர் போலீஸ் நிலையத்தில் இருந்த இரண்டு மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இரண்டு மாணவர்கள் விடுவிக்கப்பட்ட வேளையில்  ஐந்து குடும்ப உறுப்பினர்களும் பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 (சொஸ்மா) கீழ் அவர்களின் தடுப்புக் காலம் முடிவடைந்த பின்னர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here