6 பெர்சத்து MPகள் குறித்து மக்களவை சபாநாயகர் முடிவெடுப்பார் – அன்வார்

கட்சி உறுப்பினர் பதவியை உடனடியாக நிறுத்திய 6 பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின்  நிலை குறித்து முடிவெடுக்க பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மக்களவை சபாநாயகர் டான்ஸ்ரீ  ஜோஹாரி அப்துல்லாவிடம் விட்டு விட்டார். ஆறு பெர்சத்து இடங்கள் (நாடாளுமன்ற உறுப்பினர்கள்) பற்றிய கேள்வி மக்களவை சபாநாயகர் முடிவெடுக்கட்டும் என்று அவர் இன்று துன் அப்துல் அஜீஸ் மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு சந்தித்தபோது கூறினார்.

நேற்று, பெர்சத்து தலைமைக் கொறடா டாக்டர் ரொனால்ட் கியாண்டீ ஒரு அறிக்கையில், கட்சி உறுப்பினர் பதவியை உடனடியாக நிறுத்திய 6 பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் காலி இடங்கள் குறித்த அறிவிப்பு மக்களவை சபாநாயகர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டு பெறப்பட்டதாக அறிவித்தார். கிளந்தானில் உள்ள ஜெலி மற்றும் குவா முசாங், பேராக்கில் புக்கிட் கந்தாங் மற்றும் கோல கங்சார், தஞ்சோங் காராங், சிலாங்கூர் மற்றும் லாபுவான் ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here