உட்லண்ட்ஸ்-ஜோகூர் பாலத்தின் 100 ஆண்டு நிறைவு – சிங்கப்பூருக்கு கேக் வழங்கிய BSI துணைத்தலைவர் விமலா ராமலிங்கம்

உட்லண்ட்ஸ் ஜோகூர் பாலத்தின் 100 ஆண்டு நிறைவை அனுசரிக்கும் வகையில் ஜோகூர் சோதனைச்சாவடி ஆணையம் சிங்கப்பூரின் குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையத்திற்குக் கேக் ஒன்றை வழங்கியுள்ளது. கேக்கில் இணைப்புப் பாலத்தின் படம் இடம்பெற்றிருந்தது. காஸ்வே என்று அழைக்கப்படும் ஜோகூர் காஸ்வே 1920இல் ஆரம்பிக்கப்பட்டு 1923ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.



“100 ஆண்டுகள் வலுவான பிணைப்பு” என்ற வார்த்தைகள் கேக்கில் எழுதப்பட்டிருந்தன.
 இருநாட்டுக்கும் இடையிலான பிணைப்பு தொடரும் என்று நம்புவதாக மலேசிய சோதனைச்சாவடி ஆணையம் அதன் முகநூல்  பக்கத்தில் குறிப்பிட்டது. அந்தப் பாலம் திறக்கப்பட்டு நேற்றுடன் (28 ஜூன்) 100 ஆண்டு நிறைவடைந்தது. உலகின் ஆகப் பரபரப்பான தரை வழி பாலங்களில் அதுவும் ஒன்று. ஜோகூர் பிஎஸ்ஐ குடிநுழைவுத் துணைத்தலைவர் விமலா ராமலிங்கம் சிங்கப்பூர்  குடிநுழைவு மற்றும் சோதனை சாவடிகள் ஆணையத்திடம் கேக்கை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here