டெல்லியில் விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த சோகம் நீங்கும் முன் குஜராத்தில் ராஜ்கோட் விமான நிலையத்தின் கூரை கனமழையால் இடிந்து விழுந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், டெல்லி விமான நிலையத்தில் நேற்று அதிகாலை மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில், மேற்கூரை இடிந்து பல கார்களில் விழுந்தன. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 20 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 3 லட்ச ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த சோகம் நீங்கும் முன் குஜராத்தில் விமான நிலையத்தின் மேற்கூரை இன்று இடிந்து விழுந்துள்ளது. குஜராத் மாநிலத்திற்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை இன்று விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெய்த கனமழை காரணமாக குஜராத் மாநிலம் ராஜ்கோட் விமான நிலையத்தின் கூரை கனமழையால் இடிந்து விழுந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





















