“Op Mabuk” சோதனை: 16 வயது இளைஞன் உள்ளிட்ட 35 பேர் கைது

ஜோகூர் பாருவில் “Op Mabuk” என்ற சோதனை நேற்று  மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட நடவடிக்கையில் 16 வயது இளைஞன் உட்பட 35 நபர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 16 முதல் 60 வயதுக்குட்பட்ட 33 ஆடவர்களும் இரண்டு பெண்களும் அடங்குவர் என்று ஜோகூர் காவல்துறை தலைவர்  எம் குமார் தெரிவித்தார்.

அவர்களில் 32 பேர் மது போதையில் வாகனம் ஓட்டியதற்காக சாலைப் போக்குவரத்துச் சட்டம் (APJ) 1987 இன் பிரிவு 45 a (1) இன் கீழ் கைது செய்யப்பட்டனர். மேலும் மூன்று பேர் அதே சட்டத்தின் பிரிவு 42 (1) இன் கீழ் வேகமாகச் சென்றதற்காக கைது செய்யப்பட்டனர்.

மேலும் ஒரு கார் மற்றும் 10 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்துள்ளோம் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையின் போது மொத்தம் 1,417 நபர்கள் மற்றும் 1,302 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதாக குமார் கூறினார். பல்வேறு குற்றங்களுக்காக மொத்தம் 481 சம்மன்கள் விதிமீறல் வாகனமோட்டிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here