பத்து பஹாட் வட்டாரத்தில் 64 வயதான ஒருவர் கிரிப்டோகரன்சி முதலீட்டுத் திட்டத்தில் 400,000 ரிங்கிட்டுக்கு மேல் இழந்துள்ளார். பத்து பஹாட் காவல்துறைத் தலைவர் ஷாருலானுார் முஷாதத் அப்துல்லா சானி கூறுகையில், தனியார் துறையில் ஓய்வு பெற்றவர், மார்ச் மாதம் அறிமுகம் இல்லாத நபருடன் முகநூல் வழி பழக்கமானார். அவர்களின் தொடர்பு பின்னர் புலனத்துக்கு (வாட்ஸ் அப்) மாறியது. அங்கு பாதிக்கப்பட்டவர் ‘kakauet.com’ மூலம் டிஜிட்டல் நாணயத்தில் முதலீடு செய்ய ஈர்க்கப்பட்டார் என்று அவர் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 7) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர் தனது விவரங்களை ம வழங்கினார் மற்றும் மோசடி செய்தவரால் கணிசமான வருமானம் உறுதி செய்யப்பட்டது. இதன் விளைவாக, அவர் ஏப்ரல் 3 முதல் ஜூன் 18 வரை எட்டு வெவ்வேறு கணக்குகளுக்கு 400,900 ரிங்கிட் தொகையை மாற்றியிருக்கிறார்.
இந்தத் திட்டம் வெளிவரும்போது, பாதிக்கப்பட்டவருக்கு அமெரிக்க கருவூலத் துறையில் இருந்து பாதிக்கப்பட்டவரின் கணக்கை கைப்பற்றியதாகக் கூறும் செய்தியைப் பெற்றதாகவும் மோசடிக்காரர்கள் மேலும் முதலீட்டுத் தொகையில் 3 விழுக்காட்டினை செலுத்துமாறு கேட்டனர். பாதிக்கப்பட்டவருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவர் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார் என்று அவர் மேலும் கூறினார். இப்போது குற்றவியல் சட்டம் பிரிவு 420இன் கீழ் மோசடி செய்ததாக வழக்கு விசாரிக்கப்படுகிறது.