வங்கியில் 2 மில்லியன் ரிங்கிட் களவு; பிரதான நபர் இறந்தாலும் விசாரணைத் தொடரும் – போலீசார்

பேராக், கோல கங்சாரில் உள்ள உள்ளூர் வங்கி ஒன்றின் இரண்டு நிரந்தர வைப்பு நிதியில்   இருந்து 2 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான தொகை காணாமல் போனதை அடுத்து, விசாரணையில் உதவுவதற்காக பல நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இன்று செய்தியாளர்களிடம் பேசிய புக்கிட் அமான் வணிகக் குற்றத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ ரம்லி முகமது யூசுப், வங்கி ஊழியர் என்று நம்பப்படும் பிரதான சந்தேக நபர் ஜூலை 5ஆம் தேதி இறந்து கிடந்தாலும் போலீசார் விசாரணையைத் தொடருவர் என்று அவர் தெரிவித்தார்.

கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களின் சில பணம் திரும்பப் பெறப்பட்டதாகவும், கணக்குகள் மூடப்பட்டதாகவும் புகார் அளித்ததை அடுத்து, ஜூலை 9 ஆம் தேதி வங்கி காவல்துறையில் புகார் அளித்ததாக அவர் கூறினார். ஜூன் 27 அன்று கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் பணத்தை எடுக்க விரும்பியபோது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததாக அவர் கூறினார். வங்கியின் சோதனைகளில், அவர்களது ஊழியர்களில் ஒருவர் பணத்தை திரும்பப் பெற்று பல சேமிப்புக் கணக்குகளில் டெபாசிட் செய்திருப்பது தெரியவந்தது என்று அவர் கூறினார். குற்றவியல் சட்டம் பிரிவு 408இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here