சமையல் அறை தரையில், மங்கு கழுவும் இடத்தில் எலியின் கழிவுகள் இருந்ததை தொடர்ந்து பினாங்கில் மூன்று உணவகங்களை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டது.
லெபோ தெக் சன், ஜாலான் பினாங்கு, லெபோ பந்தாய் ஆகிய இடங்களில் இந்த மூன்று உணவகங்களும் உள்ளன.

பினாங்கு மாநகர் மன்ற லைசென்ஸ் பிரிவு, மாநில குடிநுழைவு இலாகா ஆகியவற்றின் ஒருங்கிணைந்த நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
உணவகங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தி இச்சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பினாங்கு மாநகர் மன்றம் தெரிவித்தது.

அதே சமயத்தில் சோதனை நடத்தப்பட்ட இரண்டு உணவகங்களில் ஆறு அந்நிய தொழிலாளர்களை குடிநுழைவு இலாகா கைது செய்தது. இவர்களுல் ஐவரிடம் முறையான பயணப் பத்திரங்கள் இல்லை. மேலும் ஒருவர் அனுமதிக்கப்பட்ட நாளை காட்டிலும் கூடுதல் நாட்கள் தங்கியிருந்ததற்காக கைதானார்.








