மைபிபிபி கட்சியின் லெம்பா பந்தாய் தொகுதியின் ஆண்டுக்கூட்டம் இன்று நடைபெற்றது. லெம்பா பந்தாய் தொகுதியின் தலைவர் ஜெயரத்தினம்@ அஜய் பதவி வகிப்பதாக கூட்டரசு பிரதேச (விலாயா) மைபிபிபி தலைவர் சத்யா சுதாகரன் தெரிவித்தார்.
விலாயா மாநிலத்தில் 11 தொகுதிகளில் இயங்கி வருகிறது. இம்மாநிலத்தில் 20,000 பேர் கட்சி உறுப்பினர்களாக இருக்கின்றனர். நாடளாவிய நிலையில் 120,000 உறுப்பினர்கள் கட்சியில் இணைந்துள்ளனர். 2018ஆம் ஆண்டில் உறுப்பினர்கள் எண்ணிக்கை 500,000 மேல் இருந்தது.
5 வருட போராட்டத்திற்கு பிறகு கடந்தாண்டு ஏப்ரல் மாதம் கட்சியை மீட்டெடுத்து உறுப்பினர்கள் இணைய பாடுபட்டு வருகிறோம் என்கிறார் சத்யா. மைபிபிபி உறுப்பினர்களின் எண்ணிக்கை வலுவடைந்து வருகிறது என்றார்.
வரும் 1.9.2024 அன்று மைபிபிபியின் தேசிய ஆண்டுக்கூட்டம் நடைபெறவுள்ளது. அதற்கு முன்பு மாநிலத் தொகுதிகளின் ஆண்டுக்கூட்டத்தை நடத்துவதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

லெம்பா பந்தாய் தொகுதி மைபிபிபி தலைவர் ஜெயரத்தினம்@ அஜய் கூறுகையில் எங்கள் தொகுதியில் 7 கிளைகள் உள்ளன. 3 கிளைகளின் ஆண்டு கூட்டம் முடிவடைந்த நிலையில் 4 கிளைகளை சேர்ந்த 150 உறுப்பினர்களின் வருகையோடு இன்றைய ஆண்டுக்கூட்டம் நடந்தேறியது என்றார். இவ்வேளையில் கட்சியின் தேசியத்தலைவர் டத்தோ லோகா பாலா மோகன், விலாயா மாநிலத் தலைவர் சத்யா சுதாகரன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக கூறினார்.
இதற்கிடையில் சத்யா சுதாகரன் கூறுகையில் இன்றைய அரசியல் சூழ்நிலையில் 4 கிளைகளில் 150 உறுப்பினர்களை சேர்ப்பது என்பது பாராட்டுகுரியது என்றார்.









