கோலாலம்பூர்:
மே 1 முதல் 31 வரையிலான காலப்பகுதியில், மே 2024க்கான வாக்காளர் பட்டியலில் (DPT BLN5/2024) 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மொத்தம் 39,019 மலேசியர்கள் தானாகவே புதிய வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் 6,547 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் தொகுதி மாறியதாகவும், 1,710 வாக்காளர்கள் தங்கள் நிலை அல்லது வாக்காளர் வகையை மாற்றியதாகவும் தேர்தல் கமிஷன் (EC) செயலாளர் டத்தோ இக்மல்ருடின் இஷாக் கூறினார்.
இன்று DPT BLN5/2024 விபரங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டது, இப்போது அத்தரவுகள் மதிப்பாய்வுக்காக ஆகஸ்ட் 13 தொடக்கம் 30 நாட்களுக்கு திறக்கப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
தேர்தல் ஆணையத்தின் தரவுகளை மதிப்பாய்வு செய்ய https://www.spr.gov.my அல்லது https://mysprsemak.spr.gov.my; மாநில தேர்தல் அலுவலகங்களின் அதிகாரப்பூர்வ போர்டல் http://ppn.spr.gov.my; மற்றும் https://myspr.spr.gov.my இல் ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் MySPR Semak மொபைல் அப்ளிகேஷன் மூலமாகவும் அல்லது 03-8892 7218 என்ற எண்ணில் வாக்காளர் பதிவு சரிபார்ப்பு ஹாட்லைன் மூலமாகவும் மதிப்பாய்வு செய்யலாம் என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.























